நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இன்று வெளியிடப்பட்டது. இப்பாடல்களுக்கான யூடியூப் லிங்க்-ஐ இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
,
இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷ் நிறுவனமான ‘வண்டர்மார் ஸ்டூடியோஸ்’ தயாரித்துள்ளது. காலா கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவருடன் பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் முதல் பாடல் சிங்கிள் டிராக் ‘செம்ம வெயிட்டு’ வீடியோ கடந்த மே 1ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்த ஒரு ப்ரிவ்யூ விடியோ கடந்த மே 7ம் தேதி வெளியிட்டார். இதில் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் பாடல்கள் உருவான விதம் மற்றும் அனுபவம் குறித்து பேசியுள்ளனர்.
,
மேலும் இந்தப் படத்தில் ஆடியோ லான்ச் மே 9ம் தேதி (இன்று) நடைபெறும் என்று தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இன்று நடைபெறும் இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி சென்னை YMCA மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/kaala-song-list-265x300.jpg)
இந்தப் படத்தின் பாடல்கள் இன்று 9 மணி முதல் உலகம் முழுவதும் அனைத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
,
தனுஷ் தயாரிப்பு நிறுவனம் ‘வண்டர்பார் ஸ்டூடியோஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளது.
,
இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெறுகின்றன.
1. போராடுவோம்
2. நிக்கல் நிக்கல்
3. தெருவிளக்கு
4. தங்க சேல
5. கற்றவை பற்றவை
6. செம வெயிட்டு
7. கண்ணம்மா
8. கண்ணம்மா – ACAPELLA
9. உரிமையை மீட்போம்
காலா படத்தின் பாடல்கள் மொத்தமாக 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டுக்குப் பின்னர் ரசிகர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.