scorecardresearch

Kaala Movie Release : க்யாரே… பிளாக்பஸ்டரா? திரையுலகினர் ரியாக்‌ஷன்ஸ்!!!

Kaala Movie Review and Release : நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் இன்று வெளியாகி மாபெரும் வெற்றியை தழுவியுள்ளது. திரையுலகினர் பலர் பாராட்டு.

Kaala Movie Release
Kaala Movie Release

Kaala Movie Review and Release : இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பட்டாசுகள் வெடித்தும், ரஜினியின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தியும் ரசிகர்கள் இப்படத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு புறம் ‘காலா’ விழாவைக் கொண்டாட, மறுபுறம் திரையுலகினரும் காலை முதலே சமூக வலைத்தளத்தில் ‘காலா’ குறித்த விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அவைகளில் சிலவற்றை காணலாம்:

காலா படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் “நிலம் எங்கள் உரிமை, உரிமையை மீட்போம்” என்ற பாடல் வரியை ட்வீட் செய்துள்ளார்.

காலா திரைப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தனது டுவிட்டர் பக்கத்தில் காலா ரிலீஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

‘சிங்கம் கர்ஜிக்க தொடங்கிவிட்டது’ என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் பகிர்ந்துள்ளார்.

‘க்யாரே.. பிளாக்பஸ்டரா?’ என பெரும் உற்சாகத்துடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் காலா ரிலீசை கொண்டாடினார்.

இயக்குநர் பாண்டிராஜ், ‘காலா’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தனது வாழ்த்துக்களை கூறினார்.

‘வா தலைவா… காலா’ என தனது மாமனார் ரஜினிகாந்தின் பட ரிலீசை மருமகன் தனுஷ் கொண்டாடிய தருணம்.

காலா திரைப்படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹீமா குரேஷி, தனது டுவிட்டர் பக்கத்தில் “எல்லோரும் எழுந்திருங்கள். இன்று காலா தினம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ ரிலீஸுக்கு ட்வீட் செய்த தருணம். “எல்ல இடத்திலும் தலைவர் தரிசனம். வாழ்த்துக்கள் காலா டீம். படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, காலா படத்தின் வெளியீட்டிற்கு இயக்குநர் பா. இரஞ்சித்திற்கு வாழ்த்து கூறி, தலைவரை காண ஆரவத்துடம் இருப்பதாக கூறினார்.

“ஓக்கே மா…. ஓக்கே”…. ‘ஒரே ஒரு தலைவர் தான். என் அப்பா சூப்பர் ஸ்டார்’ என ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பெருமையுடன் கூறியுள்ளார்.

‘கடல் கடந்தும் காலா படத்தை புகழ்கிறார்கள்.’ என இயக்குநர் வெங்கர் பிரபு கூறியுள்ளார். காலா இயக்குநர் பா. இரஞ்சித்திற்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நாயகன், அமிர் கான் காலா படத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “நான் ரஜினிகாந்தின் பெரிய ரசிகன். காலா படத்தை காண காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kaala movie review release celebrities reaction to movie

Best of Express