/tamil-ie/media/media_files/uploads/2018/05/kaala-1.jpg)
kaala
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘காலா’. இப்படத்தை நடிகர் தனுஷ் நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் டீசர் கடந்த மார்ச் 2ம் தேதி வெளியானது. பின்னர் காலா படத்தின் சிங்கிள் டிராக், பாடல்கள் முன்னோட்டம் என அனைத்தையும் தனுஷ் வெளியிட்டார்.
வரும் ஜூன் 7ம் தேதி ‘காலா’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Wunderbar films #kaala new trailer will be released today evening at 7 pm .. #thekingarrives#manofmasses#thalaivar#superstar WORLD WIDE RELEASE FROM JUNE 7Th. Mark the date. Keep the leave letters ready.
— Dhanush (@dhanushkraja) 28 May 2018
“வண்டர்பார் ஃபிலிம்ஸ் ‘காலா’ படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும். ஜூன் 7ம் தேதி முதல் உலகெங்கும் வெளியாகும் காலா படத்திற்காக அலுவலக விடுமுறைகள் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.