வெளிநாடுகளில் காலா வசூல்... ஓர் ஒப்பீடு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் காலாவின் வெளிநாடுகளின் வசூல் சிறப்பாகவே உள்ளது.

பாபு

வெளிநாடுகளில் காலா படத்தின் வசூல் தமிழகத்தைப் போலவே சிறப்பாக உள்ளது. பிற தமிழ் நடிகர்களின் படங்கள் வசூலிப்பதைவிட காலா அதிகம் வசூலித்திருக்கிறது. அதேநேரம், கனடா விநியோகஸ்தர்கள் படத்தை புறக்கணித்திருப்பதால் கனடாவில் வசூல் மிகக்குறைவு. தெலுங்கில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம், பரத் அனே நேனு படங்களின் ஓபனிங் யுஎஸ் வசூலை காலா தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில முக்கிய திரைப்படங்களின் வசூலுடன் காலா வெளிநாடுகள் வசூல் ஓர் ஒப்பீடு.

யுஎஸ்

2010 – எந்திரன் – 6.81 கோடிகள் (மூன்று தினங்கள்)

2015 – ஐ – 4.30 கோடிகள் (மூன்று தினங்கள்)

2016 – கபாலி (தமிழ், தெலுங்கு) – 24.33 கோடிகள் (மூன்று தினங்கள்)

2017 – மெர்சல் – 7.13 கோடிகள் (ஐந்து தினங்கள்)

2017 – விவேகம் – 2.88 கோடிகள் (நான்கு தினங்கள்)

2018 – ரங்கஸ்தலம் (தெலுங்கு) – 14.02 கோடிகள் (மூன்று தினங்கள்)

2018 – பரத் அனே நேனு (தெலுங்கு) – 16.02 கோடிகள் (மூன்று தினங்கள்)

2018 – காலா – 12.36 கோடிகள் (நான்கு தினங்கள்)

கனடா

ஐ – 124 லட்சங்கள்

கபாலி – 167 லட்சங்கள்

விவேகம் – 5.08 லட்சங்கள்

மெர்சல் – 164  லட்சங்கள்

காலா – 158 லட்சம்

யுகே மற்றும் அயர்லாந்த்

ஐ – 214 லட்சங்கள்

கபாலி – 247 லட்சங்கள்

விவேகம் – 86.32 லட்சங்கள்

மெர்சல் – 304 லட்சங்கள்

காலா – 142 லட்சங்கள்

ஆஸ்திரேலியா

ஐ – 125 லட்சங்கள்

கபாலி – 6.53 லட்சங்கள்

விவேகம் – 93.65 லட்சங்கள்

மெர்சல் – 208 லட்சங்கள்

காலா – 207 லட்சங்கள்

நியூசிலாந்து

ஐ – 14.33 லட்சங்கள்

விவேகம் – 5.56 லட்சங்கள்

மெர்சல் – 13.61 லட்சங்கள்

காலா – 17.89 லட்சங்கள்

மலேசியா

ஐ – 374 லட்சங்கள்

கபாலி – 466 லட்சங்கள்

விவேகம் 117 லட்சங்கள்

மெர்சல் – 358 லட்சங்கள்

காலா – 178 லட்சங்கள்

இது தவிர ஜெர்மனியில் காலா முதல் மூன்று தினங்களில் 2.14 லட்சங்களையும், சிங்கப்பூரில் 32.10 லட்சங்களையும் வசூலித்துள்ளது.

மெர்சலைத் தொடர்ந்து காலாவும் பிரான்சில் வெளியாகியுள்ளது. முதல் மூன்று தினங்களில் 13,549 மெர்சல் டிக்கெட்கள் விற்பனையானதாகவும், 4 தினங்களில் 5,877 காலா டிக்கெட்கள் விற்பனையாகியிருப்பதாகவும் பிரான்ஸ் விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் காலா பின்தங்கியது போல் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் காலாவின் வெளிநாடுகளின் வசூல் சிறப்பாகவே உள்ளது.

×Close
×Close