காலா படம் பார்த்தேன். ரஜினிகாந்த் என்கிற ஒற்றை வசீகரம் வென்றுவிட்டது என விவேக் கூறினார். ரஜினியை கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
காலா படம் கடந்த 7-ம் தேதி ரிலீஸ் ஆனது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருக்கும் சூழலில் இந்தப் படத்தின் ரிசல்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தைப் பற்றிய ரிவ்வியூ ரிப்போர்ட் மெச்சத்தகுந்த வகையில் வந்தது.
Kaala – superstar’s best after Sivaji !
— Dhaya Alagiri (@dhayaalagiri) 9 June 2018
காலா கலெக்ஷன் குறித்து மாறுபட்ட கருத்துகள் வந்தன. உலக அளவில் பரவலாக நல்ல கலெக்ஷன் என ஒரு தரப்பு கூறுகிற நிலையில், இன்னொரு தரப்பு கபாலி கலெக்ஷன் அளவுக்கு இல்லை என கூறி வருகிறார்கள்.
காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும்,ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது. @rajinikanth @dhanushkraja
— Vivekh actor (@Actor_Vivek) 10 June 2018
இந்தச் சூழலில் காலா குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார். அதில், ‘காலா பார்த்தேன். Super star-ஐ வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள். எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது.’ என கூறியிருக்கிறார் விவேக்.