இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” படத்தை பெங்களூரூவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை தமிழகத்தைல் வந்து பார்க்க பெங்களூர் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்து விடவில்லை. இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ரஜினி கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு பெங்களூரூவில் எதிர்ப்புகள் எழுந்தது.இதன் எதிரொலியாக காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை அந்த மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டது. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பெங்களூர் ரஜினி ரசிகர்கள் மற்றும் பெங்களூர் வாழ் தமிழர்கள் காலா படத்தை தமிழகத்தில் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதுக்குறித்து பேசியுள்ள பெங்களூர் ரஜினி ரசிகர் ஒருவர், "பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் காலா படத்தை பார்க்க நாங்கள் ஆவலாக காத்திருந்தோம். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் படம் பெங்ஜளூரில் வெளியாக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தை தமிழகத்தில் வைத்தே பார்க்க முடிவு செய்துவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.