Kaala Trailer காலா டிரெய்லர் அதகளமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. ‘கூட்டுங்கடா மக்கள’ என ரஜினிகாந்த் வசனம் இடம் பெறுகிறது. வீடியோ இங்கே!
Kaala Trailer ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த காலா டிரெய்லரை இன்று (மே 28) தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் வெளியிட்டார். வழக்கம்போல ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பில் டிவிட்டரில் காலா டிரெய்லர் டிரெண்ட் ஆனது.
Kaala Trailer காலா டிரெய்லர் வெளியீடு வருகிற ஜூன் 7-ம் தேதி வெளியாக இருக்கும் காலா படத்திற்கு முன்னோட்டம்! ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருக்கும் சூழலில் அவரது ஒவ்வொரு வசனமும் அரசியலுடன் முடிச்சுப் போடப்படுவதால எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கின்றன.