Kaappaan Locust : தொழில்நுட்ப முறைகளில் பல புதிய முயற்சிகளை செய்துவரும் 90'ஸ் கிட்ஸ் சிறப்பு குழந்தைகளாக கருதப்படுகிறார்கள். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பலருக்கு இன்னும் திருமணமாகவில்லை என நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் தற்போது பல மீம்ஸ், இணையத்தில் வலம் வருகின்றன. அதில் 90’ஸ் கிட்ஸ் எப்படி திருமணம் செய்வது, என்பது குறித்து நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும், என தீவிரமான கோரிக்கை வைத்துள்ளனர்.
’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்
ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சூர்யாவின் வழக்கம். கடந்த காலங்களில் தொற்றுநோயை எதிர்கொள்வது குறித்து, ஏழாம் அறிவு திரைப்படத்திலும், வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து காப்பான் திரைப்படத்திலும் நடித்திருந்தார் சூர்யா. இந்த இரு படங்களும் தற்போதைய கொரோனா வைரஸ், பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி ஆகியவற்றுடன் நிஜத்தில் பொருந்திப் போகிறது. குறிப்பாக எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து கணித்து, அப்போதே திரைப்படங்கள் உருவாக்கப்பட்டதற்காக சூர்யாவையும், படக் குழுவினரையும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்து, தற்போது திருமணமாகாத 90’ஸ் கிட்ஸ் சூர்யாவின் உதவியை நாட முடிவெடுத்துள்ளனர். 90’ஸ் கிட்ஸ் திருமணம் செய்துகொள்வதை அடிப்படையாக வைத்து, ஒரு திரைப்படத்தில் நடிக்கும்படி அவரிடம் மீம்ஸ் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். காரணம் அவர் படத்தில் நடிப்பது நிஜத்தில் நடப்பதால், கட்டாயம் தங்களுக்கும் திருமணம் ஆகிவிடும், என்ற எதிர்கால திட்டத்தில் இருக்கிறார்கள் 90’ஸ் கிட்ஸ்.
தவிர, சூர்யா தற்போது சுதா கொங்கராவின், ‘சூரறைப்போற்று’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”