அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அதகளமாக வெளியானது காப்பான் டிரைலர்....

Kaappaan trailer : கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ, இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kaappaan trailer : கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ, இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaappaan trailer, KV Anand, Suriya, Mohanlal, Arya, Sayyeshaa, surya, Kaappaan, Kapan, Kaappaan movie trailer

Kaappaan trailer, KV Anand, Suriya, Mohanlal, Arya, Sayyeshaa, surya, Kaappaan, Kapan, Kaappaan movie trailer காப்பான். சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், மோகன்லால்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் டிரைலர் இன்று ( செப்டம்பர் 4ம் தேதி) வெளியானது.

Advertisment

கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ, இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் ஐயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக உருவாகியுள்ள படம்தான் காப்பான். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தன. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சயிஷா ஷேகல், சமுந்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

ராணுவ வீரர்களின் பெருமை குறித்து மோகன்லால் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஒரு உயிரை பலிகொடுத்து நூறுபேரை காப்பாற்ற முடியும் என்றால் அதில் தப்பில்லை என மோகன்லால் பேசும் மற்றொரு வசனம் இடம்பெற்றுள்ளது. வழக்கமாக கேவி ஆனந்த் படங்களில் வருவது போல் வெளிநாடுகளில் பாடல்கள் படப்பிடிப்பு, குண்டுவெடிப்பு, அரசியல்வாதிகளின் வசனம் உள்ளிட்டவை இந்த டிரைலரிலும் இடம்பெற்றுள்ளன.

Advertisment
Advertisements

படம், செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: