Advertisment

சூர்யா, கேவி.ஆனந்த்தை நேரில் வாழ்த்திய டெல்டா விவசாயிகள் சங்கம்!

Kaappaan Movie: பல்வேறு சமூக பிரச்னைகளை பேசியுள்ள இந்தத் திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suriya Kaappaan, kv anand

Suriya Kaappaan

Suriya's Kaappaan: 'லைகா புரொடக்ஷன்ஸ்’ பேனரின் கீழ் சுபாஷ்கரன் தயாரித்திருந்த ‘காப்பான்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இதில் மோகன் லால், பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காப்பான் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பல்வேறு சமூக பிரச்னைகளை பேசியுள்ள இந்தத் திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ சூர்யா விவசாயியாக நடித்து, அந்தத் தொழிலின் முக்கியத்துவமும் தேவையும், அது சார்ந்த வாழ்க்கை முறையையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

காப்பான் படத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி, சிறப்பித்ததற்காக தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பிற உறுப்பினர்கள், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

Actor Suriya Kv Anand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment