Tamilrockers Leaked Surya Starrer ‘kaappaan’ Movie: காப்பான் படத்தையும், படம் வெளிவந்த முதல்நாளிலேயே தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சயிஷா ஷேகல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.
படம் இருதரப்பு விமர்சனங்களையும் பெற்றுள்ளதால், பலர் நாளை தியேட்டருக்கு போகலாம் என்று நினைத்து இருக்கையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இன்றே, படத்தை வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
வார இறுதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆனது. இத்தகைய படத்தை தமிழ்ராக்கர்ஸ் படம் வெளியானநாளிலேயே இணையத்தளத்தில் லீக் செய்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே படம் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர்களின் உழைப்பில் மண்ணை வாரிப் போடுகிறது தமிழ்ராக்கர்ஸ். இவர்களின் இந்த முறைகேடான செயலை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை அடுத்து அந்த பக்கத்தில் அட்மினை கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்து வருகிறது.