Kaathu Vaakula Rendu Kadhal movie: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கூடுதலாக சம்ந்தா என்டரி, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பார்த்துவிட்டு கமெண்ட்களை ரசிகர்கள் இணையத்தில் குவித்து வருகின்றனர்.
ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகவும் பாசிட்டிவ்-ஆன கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக, படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். திரையில் கதிஜா மற்றும் கண்மணி இருவருக்கும் இடையேயான சீன் அல்டிமேட்டாக இருப்பதாகவும், இருவருக்கும் படத்தில் சமமான ரோல் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அனிருத்தின் 25 ஆவது படம் என்பதால், அவரது இசையும் படத்தில் பட்டையை கிளப்புகிறது.இந்தப் படத்திற்கு தாராளமாக குடும்பத்துடன் தியேட்டர் சென்று செம்ம ஜாலியாக சிரித்து மகிழலலாம் என நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil