Vignesh Shivan responds to Kaathuvaakula Rendu Kaadhal criticism, says ‘Don’t know much about feminism and sexism’: இயக்குனர் விக்னேஷ் சிவனின் சமீபத்திய திரைப்படமான காத்துவாக்குல ரெண்டு காதல், பெண்களைப் பற்றிய பிரச்சனைக்குரிய சித்தரிப்புக்காக விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த விமர்சனங்களுக்கு ஒரு புதிய பேட்டியில் பதிலளித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றும் ஒரு மனிதனாக நடித்துள்ளார், ஆனால் உண்மை தெரிந்தும் அந்த பெண்கள் அவருக்காக சண்டையிடுவார்கள். அந்த இரண்டு பெண்களாக நயன்தாரா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ளனர்.
கலாட்டா பிளஸில் ஒரு நேர்காணலில், இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், படத்தை 'பாலியல் வளையத்திற்குள்' செல்லாமல் எவ்வாறு தவிர்த்தார் என்று கேட்கப்பட்டது. இதற்கு Netflix இன் செக்ஸ் எஜூகேசன் தொடரின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய விக்னேஷ் சிவன், திரைப்படங்களை இயக்குவதற்கு முன்பு தனது திரைக்கதைகளை மற்றவர்களுக்குக் காண்பிப்பதைத் தவிர்ப்பதாகக் கூறினார். ஏனெனில் பல கருத்துக்கள் அவரை தனது இலக்கிலிருந்து திசைதிருப்பக்கூடும் என்று அவர் நம்புகிறார்.
விக்னேஷ் கூறும்போது, “பெண்ணியம் மற்றும் பாலினம் போன்றவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பொழுதுபோக்கிற்காகத்தான் திரைப்படங்களை உருவாக்குகிறேன். பாவ கதைகள் தொடர் மூலமும் பின்னடைவை சந்தித்தேன். என்னைப் பொறுத்த வரையில் பொழுதுபோக்கையே பிரதான நோக்கமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறேன். நாம் ஒரு பாடலை எழுதும்போது கூட அதை ஹிட் ஆக்குவது தான் முதல் முன்னுரிமை. என் எண்ணங்களில் 90 சதவீதம் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதுதான். மற்ற விஷயங்கள் மீதமுள்ள 10 சதவீதத்திற்குள் வருகின்றன. வேடிக்கையை (மற்றும் சமூகப் பிரச்சினைகளை) சமநிலைப்படுத்தும் அளவுக்கு நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், “காட்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிந்ததும் திருப்தி அடைகிறேன். எடுத்துக்காட்டாக, செக்ஸ் எஜுகேஷன் என்ற Netflix தொடர் உள்ளது, அதில் செக்ஸ் தெரபிஸ்ட்டாக இருக்கும் ஒரு தாய் தன் மகனுக்கு டிப்ஸ் கொடுக்கிறார். ஒரு இளைஞனை அப்படிச் சித்தரிக்க முடியுமா என்ற கேள்வியைக் கேட்டால், அந்தக் கதையை மேலும் நகர்த்த முடியாது. அதனால்தான் நான் எனது ஸ்கிரிப்ட்களை யாரிடமும் விவாதிப்பதில்லை, ஏனென்றால் இந்தக் கேள்விகள் கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத் தடுக்கும் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையோடு இந்தப் படத்தை செய்திருக்கிறேன். இது இந்த ரசனையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று கூறினார்.
மேலும், "நான் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன், அது நான் எதிர்பார்த்த அனைத்தையும் கொண்டுள்ளது. எதிர்பாராத எதிர்வினை எதுவும் இல்லை. பாதாம் மற்றும் பிஸ்தா பற்றி அவர்கள் (கதாபாத்திரங்கள்) விவாதம் செய்யும் காட்சியின் போது மக்கள் கைதட்டுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், பார்வையாளர்கள் அந்தக் காட்சிக்கு கைதட்டினார்கள். இதுவே எனக்கு வேண்டும்” என்று முடித்தார்.
இதையும் படியுங்கள்: Happy Birthday Ajith Kumar: உழைப்பால் உயர்ந்த அஜித்… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
முன்னதாக, பார்வையாளர்கள் படத்தை நல்லப்படியாக பார்க்க வேண்டும் என்று மட்டுமே விரும்புவதாகவும், அதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்றும் சமந்தா கூறியிருந்தார். ட்விட்டர் AMA இன் போது சமந்தா, "நான் மக்களை சிரிக்க வைக்கும் ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன், அதிகம் சிந்திக்க வேண்டாம் .. அதிகமாக ஆராய வேண்டாம் ... நமது அன்றாட பிரச்சனைகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு கொஞ்சம் சிரிக்கவும்." என்று கூறினார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்க்காக விமர்சனம் செய்த மனோஜ் குமார் ஆர் படத்தை 'ஒரு பெரிய குழப்பம்' என்று அழைத்தார். மேலும், “கண்மணி அல்லது கதீஜா ஏன் ராம்போவுடன் காதல் இல்லாத உறவில் இருக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பெண்களுடன் பேசும்போது அவர்களின் கண்களைக்கூட அவனால் சரியாகப் பார்க்க முடியாது. மேலும் ஒரு பெண்ணை அவனுக்கு சரியாக காதல் செய்ய தெரியாது. ஆனாலும், கண்மணியும் கதீஜாவும் ராம்போவின் பாசத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் எழுதினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.