Advertisment

Kaathuvaakula Rendu Kaadhal Movie Review: எப்படி இருக்கு காத்துவாக்குல ரெண்டு காதல்? விக்னேஷ் சிவன் முயற்சி வெற்றி அடைந்ததா?

கார் டிரைவராகவும், பவுன்சராகவும் இரட்டை வாழ்க்கை வாழும் ராம்போ, மாறுபட்ட ஆளுமை கொண்ட இரண்டு பெண்களைக் காதலிக்கிறார். இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaathuvaakula Rendu Kaadhal Movie Review

Kaathuvaakula Rendu Kaadhal Movie Review

கார் டிரைவராகவும், பவுன்சராகவும் இரட்டை வாழ்க்கை வாழும் ராம்போ, மாறுபட்ட ஆளுமை கொண்ட இரண்டு பெண்களைக் காதலிக்கிறார். இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

Advertisment

ஒரே நேரத்தில் இருவரைக் காதலிப்பது என்பது தமிழ் சினிமாவில் புதிதல்ல.  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், விக்னேஷ் சிவனும் இதைத்தான் தனது சொந்த பாணியில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கையாள்கிறார்.

ரஞ்சன்குடி அன்பரசன் முருகேசன் பூபதி என்கிற ராம்போ என்ற சிறுவனுடன் படம் தொடங்குகிறது, அதிஷ்டம் இல்லாத ராம்போ பிறந்த உடனே அப்பா இறந்து விடுகிறார், அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். மேலும் அவனுடைய இருப்பே அவளுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்றும் நம்புகிறாள்.

அதனால் ஒரு கட்டத்தில் தன் அம்மாவை பார்ப்பதையே ராம்போ விட்டுவிடுகிறான். இப்படி எதுவும் கிடைக்காமல், அனைத்திலும் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும் ராம்போ வாழ்க்கையில்’ கண்மனியும், கதீஜாவும் வருகிறார்கள்.

ஓலா டாக்சி டிரைவராக வேலை செய்யும் விஜய்சேதுபதியுடன் நயன்தாராவுக்கு நட்பு ஏற்படுகிறது. அதேபோல இரவில் பார் ஒன்றில் பவுன்சராக இருக்கும்போது சமந்தாவின் நட்பு கிடைக்கிறது.

இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? சமந்தாவும், நயன்தாராவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

வழக்கம் போல விஜய் சேதுபதி காதல், பாசம், வெறுப்பு என நடிப்பில் அசத்துகிறார். கண்மணியாக வரும் நயன்தாரா தம்பி, தங்கையை வளர்க்கும் ஒரு தாயாக, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதீஜாவாக மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. சமந்தாவின் காதலனாக நடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சில நேரமே வந்தாலும் ரசிகர்களை ஈர்க்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். இது அனிருத் இசையமைக்கும் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் திரைக்கதை, குறிப்பாக காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். நயன்தாராவை காட்டிலும் சமந்தா, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இருவரின் இருப்பு சாதாரண காட்சிகளைக் கூட உயர்த்த உதவுகிறது.

மொத்தத்தில், காத்து வாக்குல ரெண்டு காதல் ஒரு முறை பார்க்கலாம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment