Vijay TV Serials : விஜய் டிவி பல மெகா தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ரசிகர்களை கவர்வதற்காக பல புதிய முயற்சிகளையும் இத்தொலைக்காட்சி செய்து வருகிறது. அதன்படி, ‘அரண்மனைக்கிளி’, ’காற்றின் மொழி’ என்ற இரு சீரியல்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளது.
Advertisment
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !
பொதுவாக சீரியல்கள் அனைத்தும் அரை மணி நேரம் மட்டும் தான் ஒளிபரப்பப்படும். ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி என்றால் ஒரு மணி நேரம், அல்லது முக்கால் மணி நேரம் ஒளிபரப்புவார்கள். ஆனால் காற்றின் மொழி மற்றும் அரண்மனைக்கிளி ஆகிய இரண்டு தொடர்கள் மட்டும் இனி வரும் காலங்களில் 45 நிமிடம் ஒளிபரப்பு செய்யப்படும் என சேனல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீப காலமாகத் தான் காற்றின் மொழி ஒளிபரப்பாகி வருகிறது. ராஜாராணி சீரியல் நாயகன் சஞ்சய், பிரியங்கா ஜெயின் இந்த சீரியலில் ஹீரோ,ஹீரோயினாக நடிக்கிறார்கள். வாய் பேச முடியாத பெண், தனது தந்தையின் பாசத்திற்கு ஏங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வரும் காலங்களில் இரவு 9 மணி முதல் 9.45 வரை இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும், ‘அரண்மனைக்கிளி’ சீரியலில் மோனிஷா, சூரிய தர்ஷன், பிரகதி, நீலிமா ராணி உட்பட பலர் நடித்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளியான ஹீரோ அர்ஜுனுக்கும், அவன் தாய் மீனாட்சிக்கும் ஜானவி என்ற பெண்ணை சுத்தமாக பிடிக்காது. பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அர்ஜுனுக்கு, ஜானுவுடன் திருமணம் நடக்கிறது. புகுந்த வீட்டுக்கு வரும் ஜானு பல கஷ்டங்களை அனுபவிக்கிறாள். இந்த சீரியல் இனி 9. 45 முதல் 10.30 வரை ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் சின்னத்திரை ரசிகர்கள்.