scorecardresearch

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’! மாஸ் அப்டேட்

லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும், பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Ponniyin Selvan Title font
Ponniyin Selvan Title font

Ponniyin Selvan Title Look : இயக்குநர் மணி ரத்னம் கல்கியின் வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக தீவிரமாகவே பேசப்பட்டு வந்தது. இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இதில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத் தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த நடிகருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மணி ரத்னமும் கூட இப்படத்தை உறுதி செய்யாமல் இருந்தார்.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

இந்நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு,’பொன்னியின் செல்வன்’ படத்தை உறுதிப்படுத்தியது மணிரத்னத்தின் தயாரிப்புநிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ். அதோடு இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் ஃபாண்ட் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் ஃபாண்ட் வெளியாகியிருக்கிறது.

இனி நான் மிசஸ் ஸ்ரீத்திகா: கல்யாணத்தை உறுதிப் படுத்திய ’கல்யாணப் பரிசு’ நடிகை

ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் இந்த டைட்டில் போஸ்டரில் தொழில்நுட்பக் குழுவினர்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும், பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஜெய மோகன் வசனம் எழுத, மணிரத்னத்துடன் இணைந்து குமரவேல் திரைக்கதை அமைக்கிறார்.

விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponniyin selvan title font poster maniratnam