kaatrin mozhi kanmani sandhosh kaatrin mozhi serial
kaatrin mozhi kanmani sandhosh kaatrin mozhi serial : காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை பார்த்ததும் காதலிக்கிறான் பணாக்கர வீட்டுப் பையன் சந்தோஷ். கண்மணிக்கும் போக போக இவன் மீது காதல் வந்து நாள் முழுக்க காற்றின் மொழி தென்றல் மாதிரி சுகமாக இருக்கிறது. சந்தோஷுக்கு கண்மணியால் வாய் பேச முடியாது என்று தெரியாமல் மாதக் கணக்கில் பழகிவிட்டு, தனது அலுவலக கேன்டீனில் ஒரு வேலையும் தருகிறான் சந்தோஷ்.
Advertisment
ஒரு நாள் போன் வாங்கிக் கொடுத்து. என் கூட பேசணும்னு நினைக்கும்போது பேசு என்று சொல்கிறான். கண்மணிக்கு அதிர்ச்சியாகி விடுகிறது. என்னடா நம்மை கிண்டல் செய்யறானோ என்று நினைத்து தனிமையில் அழுகிறாள். மறுநாள் அந்த போனை கொண்டு போயி அவனிடம் தரும்போது, சந்தோஷ் சொல்றான்… இப்போ மவுன விரதம் தானே இருக்கே.. விரதம் முடிஞ்சு என் கூட போனில் பேசு என்று.
இந்த அழகான ஜோடிகளுக்கு வராத பிரச்சனையே இல்லை. ஒருபக்கம் சந்தோஷின் மாமா மகள் தீப்தி, இன்னொரு பக்கம் கண்மனியின் அப்பா. பிறந்த நாள் முதல், கண்மனியை வெறுத்து ஒதுக்கிறார். இத்தனை வருடத்திற்கு ராஜா செய்த தவறை தான் ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்று அப்பாவிடம் அன்பை பெறுகிறாள். இந்த நேரத்தில் தான் சந்தோஷ் குடும்பம் சுப்புக்கு எதிரிகளாக மாறுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த ஜோடி எப்படி சேரும் என ரசிகர்கள் குழம்பினர்.
Advertisment
Advertisements
ஒருபக்கம் சுப்பு,கண்மணிக்கு மீண்டும் பேச்சு வர ட்ரீமெண்டுகளை தொடங்க இருக்கிறார். இன்னொரு பக்கம் சந்தோஷ் கண்மணியின் திறமைக்கு தேவையான அங்கீகாரத்தை வாங்கி தருகிறார். இத்தனை நாட்களாக சந்தோஷ் காத்துக் கொண்டிருந்த தருணம் வந்து விட்டது. ஆம் தன் காதலை சந்தோஷிடம் கூறுகிறாள் கண்மனி. இனிமே நடக்க போவது சுப்பு கையில் தான் இருக்கு.