/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-105.jpg)
kaatrin mozhi serial hotstar vijaytv kaatrin mozhi
kaatrin mozhi serial hotstar vijaytv kaatrin mozhi : காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை பார்த்ததும் காதலிக்கிறான் பணாக்கர வீட்டுப் பையன் சந்தோஷ். கண்மணிக்கும் போக போக இவன் மீது காதல் வந்து நாள் முழுக்க காற்றின் மொழி தென்றல் மாதிரி சுகமாக இருக்கிறது. சந்தோஷுக்கு கண்மணியால் வாய் பேச முடியாது என்று தெரியாமல் மாதக் கணக்கில் பழகிவிட்டு, தனது அலுவலக கேன்டீனில் ஒரு வேலையும் தருகிறான் சந்தோஷ்.
இந்த அழகான ஜோடிகளுக்கு வராத பிரச்சனையே இல்லை. ஒருபக்கம் சந்தோஷின் மாமா மகள் தீப்தி, இன்னொரு பக்கம் கண்மனியின் அப்பா. பிறந்த நாள் முதல், கண்மனியை வெறுத்து ஒதுக்கிறார். இத்தனை வருடத்திற்கு ராஜா செய்த தவறை தான் ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்று அப்பாவிடம் அன்பை பெறுகிறாள். இந்த நேரத்தில் தான் சந்தோஷ் குடும்பம் சுப்புக்கு எதிரிகளாக மாறுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த ஜோடி எப்படி சேரும் என ரசிகர்கள் குழம்பினர்.
ஒருபக்கம் சுப்பு,கண்மணிக்கு மீண்டும் பேச்சு வர ட்ரீமெண்டுகளை தொடங்க இருக்கிறார். இன்னொரு பக்கம் சந்தோஷ் கண்மணியின் திறமைக்கு தேவையான அங்கீகாரத்தை வாங்கி தருகிறார். இத்தனை நாட்களாக சந்தோஷ் காத்துக் கொண்டிருந்த தருணம் வந்து விட்டது. ஆம் தன் காதலை சந்தோஷிடம் கூறுகிறாள் கண்மனி.
ஆஹா.. அற்புதம் ❤️
— Vijay Television (@vijaytelevision) February 23, 2021
காற்றின் மொழி - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KaatrinMozhi#VijayTelevisionpic.twitter.com/A6FZBxuFZK
இப்போது இந்த காதல் ஜோடி சென்னைக்கு வந்துள்ளனர். கண்மனி சந்தோஷ் தங்கை பிரியாவுடன் சென்னைக்கு வர, இவர்களுடன் சந்தோஷும் சென்னைக்கு வருகிறான். இங்கே இருவரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனால் இந்த விஷயம் மட்டும் தீப்திக்கு தெரிந்தால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.