பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க பாகுபாடு மற்றும் சுரண்டல்களை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாளத் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், மற்ற திரைப்படத் துறைகளும் அந்த அறிக்கையின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Kaavaalaa’ choreographer Jani master booked in sexual harassment case
பல மலையாள சினிமா பிரபலங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஜானி, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது ஒரு பெண் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஜானியுடன் பணிபுரிந்த புகார் அளித்த பெண், தனது புகாரில் ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறியுள்ளார். தெலங்கானாவில் உள்ள ராய்துர்கம் போலீசார் முதலில் பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த வழக்கை நர்சிங்கி காவல் நிலையத்திற்கு மாற்றியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நபராகத் திகழும் ஜானி, தனுஷ் மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடித்த திருச்சிற்றம்பலம் (2022) திரைப்படத்தில் மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக சிறந்த நடன அமைப்பிற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று சைமா (SIIMA) விருதுகள் பெற்றுள்ளார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படத் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் காவாலா (2023), வாரிசு ‘ரஞ்சிதமே’ ‘தீ தளபதி’ (2023), பீஸ்ட் ‘அரபிக் குத்து’ (2022), புஷ்பா தி ரைஸ், ஸ்ரீவல்லி (2021) மற்றும் ஆலா வைகுந்தபுரமுலூ புட்ட பொம்மா (2020) ஆகியவை ஜானியின் குறிப்பிடத்தக்க நடன அமைப்புகள் ஆகும்.
இந்த ஆண்டு ஜனவரியில், அவர் தற்போது ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சராகப் பணியாற்றி வரும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் முன்னிலையில் ஜன சேனா கட்சியில் (ஜே.எஸ்.பி) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“