விஜய்யுடன் இணையும் கப்பீஸ்… பட்டையை கிளப்ப இருக்கும் தளபதி 63

பிரபல தனியார் தொலைக்காட்சியின் போட்டியாளர் கப்பீஸ் பூவையார் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக சுட சுட ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் என இரண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்கத்தில் தளபதி 63-ல் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து […]

kabish poovaiyar, கப்பீஸ் பூவையார்
kabish poovaiyar, கப்பீஸ் பூவையார்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் போட்டியாளர் கப்பீஸ் பூவையார் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக சுட சுட ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் என இரண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்கத்தில் தளபதி 63-ல் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் 63 படத்தில் பூவையார்

இவர்களை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூப்பர் சிங்கர் பிரபலமான பூவையார் (அ) கப்பீஸ் தேர்வாகியுள்ளார். கப்பீஸ் இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல் ஒன்றையும் பாட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரபல தொலைக்காட்சியில் வரும் சிறுவர்களுக்கான பிரபல பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் கப்பீஸ். வட சென்னை பகுதியில் வளர்ந்து வரும் கப்பீஸ் தற்போது பிரபல ஜூனியர் கானா பாடகராக வலம் வருகிறார். இவர் அந்த நிகழ்ச்சியில் பாடும் அனைத்து கானா பாடல்களுக்குமே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள்.

இப்போது விஜய்யுடன் கப்பீஸ் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் கப்பீஸ் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் செம்ம குஷியில் இருக்கிறார்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kabish poovaiyar to be part of thalapathy 63 project

Next Story
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்… மகிழ்ச்சி அளித்ததா திடீர் திருப்பம்?maniratnam ponniyin selvan, பொன்னியின் செல்வன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com