'கடைக்குட்டி சிங்கம்': துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம்! ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்

தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர்களில் ஒருவர் என்றால் தயங்காமல் பாண்டிராஜ் பெயரைச் சொல்லலாம். ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு பிறகு, பாண்டிராஜ் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி, சத்யராஜ், சாயீஷா, சூரி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

முதல் நாளான இன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள கிராமிய வாசனை கொண்ட படத்தை காண வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதே தியேட்டரில் இருந்து வெளிவரும் பெரும்பாலான ரசிகர்களின் பார்வையாக உள்ளது.

வழக்கம் போல் கார்த்தி தனது ஏரியாவில் முழுதாய் ஸ்கோர் செய்ய, நீண்ட காலத்திற்கு பிறகு சூரி தியேட்டரில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். மிகப்பெரிய ஆறுதலான விஷயம் இது. துளிகூட ஆபாசமோ, இரட்டை அர்த்தம் கொண்ட வசனமோ இல்லாத, முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் செண்டிமெண்ட், காதல், காமெடி, விவசாயம் என்று மன நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இதற்காகவே அவருக்கு ஒரு வாழ்த்து!.

படம் குறித்து ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ் இங்கே,

×Close
×Close