Kadaram Kondan Teaser : நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
பிற நடிகர்களை விட வித்தியாசமாக தேர்ந்தெடுக்கும் கதைகளின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். கதைக்காக தனது உடலை ஏற்றுவதிலும் சரி.. இறக்குவதிலும் சரி.. அவருக்கு நிகர் அவரே. இதனை இயக்குநர் சங்கரின் ‘ஐ’ படத்திலேயே கண்கூடாக பார்க்க முடிந்தது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஸ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் இதற்கு முன் கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கியவர் ஆவார். கடாரம் கொண்டான் படத்தில் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். 1 நிமிடம் 7 விநாடிகள் ஓடக்கூடிய டீசரில் நடிகர் விக்ரம் கடத்தல்காரராக நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்றும் இந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.