பிரபல பாலிவுட் நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஆப்கானிஸ்தானில் பிறந்த காதர் கான், பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
மூச்சுத்திணறல் காரணமாக கனடாவில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரவிது. இந்த நிலையில், காதர் கான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிச.31ம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக மகன் சர்ஃபராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தந்தை எங்களை விட்டு பிரிந்து விட்டார். கனடாவின் நேரப்படி டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. சுமார் 16-17 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்' என்று தெரிவித்திருக்கிறார்.
1980-90 களில் தனது நடிப்பாலும், வசனத்தாலும் உச்சத்தில் இருந்த நடிகர் காதர் கான், சுவாசிப்பதற்க்கு சிரம்ப்பட்டதாகவும் அதனால் சாதாரண வெண்டிலேட்டரில் இருந்து BiPAP வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவர் Progressive Supranuclear Palsy
என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
1973ல் வெளியான 'டாக்' எனும் திரைப்படத்தில் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து முதன் முதலாக திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தரம் வீர், கங்கா ஜமுனா ஸரஸ்வதி, கூலி, அமர் அக்பர் அந்தோனி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் காதர் கான் நடித்திருக்கிறார். நடிப்பதற்கு முன் கடைசியாக ரந்தீர் கபூர் - ஜெயா பச்சன் நடித்த "ஜவானி திவானி" படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.
காதர் கானின் மறைவையடுத்து, பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் கோவிந்தா நமது இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "காதர் கான் இப்போது நம்மிடம் இல்லை. அவர் எனது நலம் விரும்பி மட்டுமல்ல, எனக்கு தந்தையாகவும் இருந்து வழிகாட்டியவர். அவரது இழப்பை விவரிக்க எனக்கு வார்த்தையே இல்லை. அவரது ஆன்மா, சொர்க்கத்தை அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.