காதல் கோட்டை படத்திற்காக அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்த செய்தியை கேட்ட படத்தின் இயக்குநர் மயங்கி விழுந்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அகத்தியன் இயக்கத்தில் 1996ம் ஆண்டு காதல் கோட்டை திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் அஜித் மற்றும் தேவையானியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்த படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியபோது, படத்தில் லாஜிக் இல்லை என்று கூறி படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவரது படமான வான்மதி படத்தை இயக்கிய தயாரிப்பாளரே இந்த படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளார். மேலும் படத்தின் இறுதி காட்சியை மாற்ற வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். இருவரும் பிரிவது போல இருந்த கதையை சேர்வது போல் மாற்ற வேண்டும் என்று தயரிப்பாளர் கேட்டுக்கொண்டதுபடி அவர் கதையை மாற்றி உள்ளார்.
இந்நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோல இந்த படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், முக்கியாமன சம்பவத்தை பற்றி பேசி உள்ளார்.
காதல் கோட்டை படத்திற்காக அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்த செய்தியை, இயக்குநரிடம் கூறிய போது, அவர் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவர் படப்பிடிப்பில் இருந்ததால், அங்கிருக்கும் நடிகர்கள் பதறி உள்ளனர். இந்நிலையில் ஏன் மயங்கினார் என்று சொன்ன போது, அனைவரும் சிரித்துள்ளனர் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“