லேட்‌ மேரேஜ் தான், ஆனா என் லைஃப்ல எல்லாமே செய்து முடிச்சிட்டேன்; காதல் மன்னன் நடிகை ஓபன் டாக்!

அஜித்குமார் நடிப்பில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான படம் காதல் மன்னன். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மானு. அவர் அவரது வாழ்க்கையை பற்றி ஒரு பெட்டியில் பேசியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அஜித்குமார் நடிப்பில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான படம் காதல் மன்னன். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மானு. அவர் அவரது வாழ்க்கையை பற்றி ஒரு பெட்டியில் பேசியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-30 130741

அஜித் ஹீரோவாக சிவா என்ற கதாபாத்திரத்திலும், அறிமுக நாயகி மானு திலோத்தம்மாவாக நடித்த திரைப்படம் தான் காதல் மன்னன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்காமல் தொடர்ந்தார். இந்த படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும், நடிகை மானுவை 90 ரசிகர்கள் மறக்கவில்லை.

Advertisment

1998ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கிய திரைப்படம் காதல் மன்னன். இந்த படத்தில் அஜித், மானு, எம். எஸ். விஸ்வநாதன்,விவேக், கரண், கிரிஷ் கர்னாட், கனல் கண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில், கிரிஷ் கர்னாட்டின் முதல் மகள் கண்டிப்பாக வளர்த்து, தன்னை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், இளைய மகள் திலோத்தம்மாவை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்த்து, பணக்கார இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது.

அந்த நேரத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்ட திலோத்தம்மாவின் அக்கா, தனது தங்கையிடம் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் போட்டோவை கொடுக்கும் படி, ஹீரோ அஜித்தை அனுப்புகிறார். அக்கா புகைப்படம் பார்த்த உடன் தன் அக்காவை டெல்லி சென்று சந்திக்க உதவுமாறு அஜித்திடம் கேட்கிறார் நாயகி.

தந்தை கட்டுப்பாடுகளை சமாளித்து அக்கா மற்றும் குழந்தைகளை சந்திக்கவைத்த அஜித் மீது திலோத்திமா மனதிலும் காதல் மலர்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும்.

Advertisment
Advertisements

"நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன், பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது விவேக் மற்றும் இயக்குனர் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். ஆனால்,படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் அதன் பின் நான் நடிக்கவில்லை." என்றார். 

அந்த நேர்காணலில் தொடர்ந்து பேசுகையில், "நான் எதையும் தியாகம் செய்யவே இல்லை. நான் தாமதமாக தான் திருமணம் செய்து கொண்டேன். அந்த படம் நடித்த பிறகு நான் எனக்கு பிடித்தமான நடனத்தை பழகினேன். அதற்க்கு பிறகும் எனக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்தது. அதனால் அந்த வயதில் நான் எந்த தியாகமும் செய்யவே இல்லை." என்று கூறியிருக்கிறார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: