இயக்குநர் பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. பாரதிராஜா அறிமுகம் செய்துவத்த ஹீரோக்கள்தான் இன்றும் திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் இவரது படம் ஒன்று கடும் தோல்வியடைந்தது. ஆனால் இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களும் ஹிட். 1982 வெளிவந்த ’காதல் ஓவியம்’ படம்தான் பெரும் தோல்வியை சந்தித்தது. அதில் புதுமுக நடிகர் கண்ணன், ராதாவும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இதில் கதாநாயகனாக நடித்த கண்ணன் கண் பார்வை தெரியாதவர் போல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு கதநாயகர்தான் காரணம் என்று அன்றைய விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இவர் ஒரு படம் மட்டுமே நடித்தார். தற்போது இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
இதில் அவர் இயற்பெயர் சுனில் கிருபளானி என்று தெரிவித்துள்ளார். மேலும் இவரது குடும்பம் 1947ல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர் என்று தெரிவித்துள்ளார். பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடியதாகவும், அப்போதுதான் காதல் ஓவியம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறினார். மேலும் அந்த படத்தின் தோல்வியால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டதாவும் கூறியுள்ளார். தற்போது அவருக்கு 60வயதாகிறது. மேலும் அவர் அமெரிக்காவில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“