/indian-express-tamil/media/media_files/2025/09/17/kadhal-2025-09-17-13-42-02.jpg)
'சங்கீத ஜாதி முல்லை' காதல் ஓவியம் பட நடிகர் இவரா? அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் கண்ணன்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாரதிராஜா. ‘இயக்குநர் இமயம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் மறைந்த தனது மகன் மனோஜை அறிமுகம் செய்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்கள் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், ‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்’ பாடல் இன்று வரை காதலர்கள் மத்தியில் ஒலிக்கும் பாடலாக உள்ளது. ’இயக்குநர் இமயம்’ பாரதி ராஜா படம் இயக்குவது மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
‘திருச்சிற்றம்பலம்’ , ‘ஈஸ்வரன்’, ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘படைவீரன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிசியாக பல படங்களில் நடித்தும் வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குநர் பாரதிராஜா திரைத்துறையில் பல சாதனைகளும் படைத்துள்ளார். இப்படி பல புகழுக்கு சொந்தக்காரரான பாரதிராஜாவின் இயக்கத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு புதுமுக நடிகர் கண்ணன் மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ’காதல் ஓவியம்’
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் ’சங்கீத ஜாலி முல்லை’ பாடல் ரசிகர்களுக்கு இன்றும் மிகவும் பிடித்த பாடலாக உள்ளது. மேலும் பாடல்களுக்கு கிடைத்த ரீச் படத்திற்கு இல்லை என்றும் இப்படம் படுதோல்வி அடைந்த படமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.
'காதல் ஓவியம்’ படத்தின் மூலம் மறக்க முடியாத நடிகராக அறியப்பட்டார் மூத்த நடிகர் கண்ணன். பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன் ‘சக்தி திருமகன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நரைத்த முடி, வயதான தோற்றம், கண்ணாடி போட்டுக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்ற வீடியோ தான் அது. இந்த வீடியோவை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் என்ன நடிகர் கண்ணனா இது அடையாளம் தெரியாமல் மாறிப்போய்விட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த ஒரு பாடலும் போதும் இவரை அடயாளபடுத்த 🥰💐
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) September 16, 2025
காதல் ஓவியம் படத்தின் ஹிரோ கண்ணன் 💐🥰 pic.twitter.com/plToXOA2G3
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us