ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகர்... 'காதலர் தினம்' பட நடிகை நெகிழ்ச்சி!

தன்னை சந்திக்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், மற்றொரு ரசிகர் தனது ரத்தத்தில் கடிதம் எழுதி மெயில் செய்ததாகவும் காதலர் தினம் நடிகை சோனாலி பெந்த்ரே தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், மற்றொரு ரசிகர் தனது ரத்தத்தில் கடிதம் எழுதி மெயில் செய்ததாகவும் காதலர் தினம் நடிகை சோனாலி பெந்த்ரே தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Kadhalar Dhinam actress Sonali Bendre share about fan who sent letter written in blood Tamil News

காதலர் தினம் நடிகை சோனாலி பிந்த்ரே ரத்தத்தில் கடிதம் அனுப்பிய ரசிகர் பற்றி பகிர்ந்துள்ளார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி திரைப்படம் 'காதலர் தினம்'. கதிர் இயக்கியத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் குணால் கதாநாயகனாகவும், சோனாலி பிந்த்ரே கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல் செம ஹிட் அடித்து, பட்டிதொட்டியெல்லம் பட்டையைக் கிளப்பியது. 

Advertisment

இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சோனாலி பெந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புற்றுநோய்க்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி தற்போது மீண்டு வந்து இருக்கிறார்.

இந்த நிலையில், 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவரை சந்திக்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், மற்றொரு ரசிகர் தனது ரத்தத்தில் கடிதம் எழுதி மெயில் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், "ஒரு முறை போபாலை சுற்றிப்பார்க்க சென்றிருந்தேன். அப்போது என்னை சந்திக்க முடியாமல் போனதால் எனது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சிலர் கூறினர். இது என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. 

Advertisment
Advertisements

இதேபோல், எனக்கு மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அதில் சிவப்பு நிறத்தாலான எழுத்துகள் இருந்தன. அது ரத்தமா? என்று சோதித்து பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படியும் செய்வார்களா? . எப்படி ஒரு மனிதனை இப்படி ஒரு இடத்தில் வைத்து பார்க்க முடிகிறது?. இதுபோன்ற ரசிகர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை." என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: