Kaithi Full Movie Download Banned: கைதி படத்தை வெளியிட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளிட்ட பைரசி வெப்சைட்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிகாரிகள் இதை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே படத்தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்ப்பு!
கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது . லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிகிலுக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தப் படம் வசூலில் ஈடு கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
கடந்த காலங்களில் இதுபோல நீதிமன்றம் தடை விதித்தும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் படங்களை லீக் செய்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. என்னதான் அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க முயன்றாலும், மாயமான் மாதிரி இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு படங்களை லீக் செய்யும் இணையதளங்களுக்கு ஒரு முடிவு கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும்.