Advertisment
Presenting Partner
Desktop GIF

கைதி விமர்சனம்: பார்வையாளர்களை கட்டிப்போடும் கார்த்தியின் விறுவிறுப்பான த்ரில்லர்

Kaithi Movie Review and Rating: Kaithi Movie Review: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மெதுவாக ஆனால் உறுதியாக தன்னை தமிழ் திரையுலகின் வணிக தளத்தில் ஒரு புதிய சக்தியாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaithi box office collection

கைதி

மனோஜ் குமார் ஆர்

Advertisment

Kaithi Movie Review: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு மாநகரம் என்ற தனது முதல் படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் ஒரு பெரும் மாநகரத்தைச் சுற்றிவருதற்கு போராடும் வெளிநாட்டினரின் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றியது. அந்த வழியில் இன்று வெளியாகியுள்ள அவருடைய கைதியும் ஒரு அந்நிய படம்தான். இது அவரது முந்தைய படம் போலல்லாமல், கைதியின் அந்நியத் தன்மை உணர்வு என்பது அறியப்படாத நிலப்பரப்பில் இருந்து வரவில்லை. மாறாக, அவருடைய சிந்தனையில், அறியப்படாத கதாபாத்திரங்கள் வெளிப்பட்டிருக்கிறார்கள்.

கைதியில் உள்ள கதாபாத்திரங்கள் உறுதியான சண்டையில் அல்லது அமைதியாக இருக்கிறார்கள். லோகேஷ் அவர்களை துயரத்துகும் புகழுக்கும் இடையே தேர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறார். சரணடையுங்கள் அல்லது எதிர்த்து போராடுங்கள் என்கிறார். தற்காப்பு அல்லது பெரிதாக செய்யுங்கள் என்கிறார். இந்த தேர்வுகள் பலவும் அன்றாட மக்களால் செய்யப்படுகின்றன. அவர்கள் பெரும் செல்வாக்கோ அல்லது உடல் வலிமையையோ இல்லாமல் பயங்கரமான குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

முழு படமும் மூன்று பகுதிகளைப் போல இயக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படம் 2-மணிநேர மணிநேர க்ளைமாக்ஸைப் போல உணரவைக்கிறது. ஆனால், லோகேஷ் படத்தின் முடிச்சை போடுவதற்கு மிகக் குறைந்த நேரத்தைப் எடுத்துக்கொள்வதால் படம் நீளமாக இருப்பதாக தோன்றவில்லை. பிஜய் (நரேன்) தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை பெரிய அளவில் போதைப் பொருளை பறிமுதல் செய்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.800 கோடி. அந்த பணம்தான் விரட்டுகிறது. முன்னிரவில் குழப்பம் தொடங்குகிறது.

அதிகாரிகளின் பினாமி யுத்தத்தை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு சில சாதாரண மக்களுக்கு சாதாரண ஒரு இரவு, முடிவில்லாத ஒரு கொடுங்கனவாக மாறுகிறது. அப்போதுதான் விடுவிக்கப்பட்ட கைதி டில்லி (கார்த்தி) சென்னையின் உயர் போலீசார்களின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கிறார். டில்லிக்கு உதவ மிகவும் ஸ்மார்ட்டான ரொம்பவும் பேசுகிற 23 வயதான ஒருவர் அமைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சில பொறியியல் மாணவர்கள் பாதுகாப்பற்ற காவல் நிலையத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு பலவீனமான போலீஸ் ஐந்து உயிர்கள் மரணத்தை எதிர்கொள்ள அந்த ஐந்துபேர்களையும் காப்பாற்ற துணிவை வரவழைக்கிறார். ஒரு அநாதை இல்லத்தில் ஒரு பத்துவயது குழந்தை உயரத்தில் தொங்குகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்.  அது இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அமைதியாக இருக்கிறார்கள்.

குற்றவாளிகள் போலீஸ்காரர்களை துரத்துவதைக் காட்டும் கிட்டத்தட்ட 2 மணிநேர 30 நிமிட தொடர்ச்சியான ஆக்‌ஷன் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்க போதுமானது இல்லை என்பது லோகேஷுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. மேலும், அதிகப்படியான ஆக்‌ஷன், களியாட்ட டான்ஸ் எல்லாம் பயனற்ற உடற்பயிற்சி என்பது லோகேஷுக்கு தெரிந்துள்ளது. அதனால்தான், அவர் தனது கதாபாத்திரங்களுக்கு வழங்க வேண்டிய உணர்வுகளுடன் இணைக்கிறார்.

லோகேஷின் படைப்புகள் தேர்ந்த உணர்வுகளைக் கொண்டுள்ளது. படத்தின் கதை சொல்லும் முறை எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாணியை நினைவுபடுத்துகிறது. உதாரணமாக, டில்லிக்கு தனது மகளிடமிருந்து ஒரு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வரும் காட்சியை எடுத்துக் கொண்டால், கதாநாயகன் தனது உண்மையான பணியை நினைவூட்டுவதால் உணர்வுகள் நுட்பமாக இருப்பது உணரப்படுகிறது. நீண்ட காலமாக பார்க்காத அவரது மகளைப் பார்க்க வேண்டும் என்பதால் அவர் அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் லோகேஷ் அந்த உணர்ச்சியை உருவாக்குகிறார். பின்னர் டில்லியின் உந்துதலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. அவர் இப்போது வேறு ஒன்றை விரும்புகிறார். மேலும் அவர் தனது விருப்பத்தை பாதுகாக்க தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளார். அந்த உணர்வுகள் படிப்படியாக அலையலையாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக இயக்குனர் லோகேஷ் வண்க காரணங்களுக்காக அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் பாடல்கள் மற்றும் ஹீரோ அறிமுகக் காட்சிகளை ஊக்குவிக்கும் ரசிகர் அல்ல என்பது இதில் தெரிகிறது.

லோகேஷ் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறார். பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக அவர் உணர்வுகளையும் வன்முறையையும் சிரமமின்றி கையாளுகிறார். இந்த படம் பதற்றமான படமல்ல அல்லது முழுமையான மெலே டிராமாவாகவும் பார்க்க முடியவில்லை.

வன்முறை காட்சிகளை படம் கையாளும் விதம் குவென்டின் டரான்டினோவின் படங்களை நினைவுபடுத்துகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட் இயக்குநர் நடத்திய கிராஃபிக் வன்முறை களியாட்டம் போல இல்லை. வன்முறை பார்வையாளர்களை பயங்கரமானதாக மாற்றுவதில்லை. ஆனால், அது நம்முடைய கவனத்தை கவரும் அளவுக்கு ஆவலுடன் இருக்கிறது.

கார்த்தியின் பாத்திரம் ஏறக்குறைய செயல்திறன் மிக்க வகையில் எழுதப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற பாத்திரங்களின் தைரியமான செயல்களும் கதையில் சரியான நேரத்தில் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. கைதி படம் இயக்குனரின் கதைக்களமாக உள்ளது. லோகேஷ் தனது படத்தின் நட்சத்திர கதாநாயகனுக்கு ஏற்றவாறு கதையை வளைக்க முயற்சிக்காமல் தனது கதையை சுதந்திரமாக செய்ய அனுமதித்த கார்த்தியைப் பாராட்ட வேண்டியது அவசியம்.

லோகேஷ் மெதுவாக ஆனால் உறுதியாக தன்னை தமிழ் திரையுலகின் வணிக தளத்தில் ஒரு புதிய சக்தியாக அறிவித்துள்ளார். அது இன்னும் மிக முக்கியமாக மைய நீரோட்ட பொழுதுபோக்கின் குறுகலான வரையறையை உணர்த்துகிறது.

Diwali Karthik
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment