Kaithi Movie Review Release Updates : இது கார்த்தி தீபாவளி.. பிகிலுக்கு சரியான மிகப்பெரிய டஃப் கொடுத்த கைதி!
kaithi Review,kaithi FDFS Response kaithi Live Updates : மாநகரத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வெறித்தனம் கைதியில் தெரிகிறது.

kaithi movie review updates :இந்தாண்டுக்கான தீபாவளி வெளியிடுகளாக பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘பிகில்’ நடிகர் விஜய் நடிப்பில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள கதை. நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வரும் ‘கைதி’ சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. வெவ்வேறு கதைக்களங்களுடன் வெளி வரும் இப்படங்களால் இவ்வருடத் தீபாவளி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என நம்பப்பட்டது
விஜய்யுடன் கார்த்தி போட்டியா என்ற சலசலப்புகள் ஏற்கனவே அதிகமாக பேசப்பட்டது. ட்விட்டரில் இதுக் குறித்த விவாதங்களும் அரங்கேறின. ஆயினும் கதையை நம்பி களத்தில் இறங்குவதாக தயாரிப்பாளர் தரப்பு மற்றும் இயக்குனர் கூறியிருந்தார்.
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. வித்யாசமான படைப்புகளுக்கு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் கைக்கொடுப்பார்கள் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மற்றொரு சான்றாக விளங்கியுள்ளது.
காலை படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கைதி திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர். கைதி படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பாருங்கள்.
கைதி திரைப்படம் ஒரு இரவில் லாரியில் அரங்கேறும் த்ரில்லர் என்று படத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
கைதியின் இடைவெளி காட்சியை வர்ணித்து ரசிகர் போட்டிருக்கும் ட்வீட்
கார்த்தி சினிமா கெரியரில் மற்றொரு மைல்கல் கைதி. இயக்குனர், படக்குழு என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.
கைதி திரைப்படத்தை மலேசியாவில் பார்த்த தமிழ் ரசிகரின் பதிவு. படம் ஹாலிவுட் லெவலுக்கு இருந்ததாக பாராட்டு.
கைதி படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகரின் ட்வீட். நீண்ட நாளுக்கு பிறகு கார்த்தியை இந்த ரோலில் பார்த்தது மகிழ்ச்சி. முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதிக்காக வெட்டிங் என்று பதிவிட்டுள்ளார்.
கைதி படத்தை பார்த்த ரசிகர்கள் மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
கைதி படத்தை பார்த்த சூர்யாவின் வெறித்தனமான ரசிகர் ட்வீட் .
கைதி படத்தை படத்தை பாராட்டி தள்ளும் பிரபல யூடியூப் விமர்சகர் .