Kaithi Trailer: மாநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘கைதி’.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை சாம்.சி.எஸ்.
ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள இப்படம் மொத்தம் 64 இரவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘கைதி’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று மாலை இதன் ட்ரைலர் வெளியாகி இப்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு ட்விட்டரில் தெரிவித்தனர்.
#kaithitrailer #KaithiDiwali trailer looks completely different and raw and @Dir_Lokesh ????????surely gonna witness @Karthi_Offl sir’s performance and attitude vera level ???? congrats to our producer @DreamWarriorpic @prabhu_sr for choosing unique scripts https://t.co/bjbALX5h4n
— Athulya Ravi (@AthulyaOfficial) October 7, 2019
”வித்தியாசமான கதையாக தெரிவதாகவும், நடிகர் கார்த்தியின் ஆட்டிட்யூடும், நடிப்பும் வேற லெவலில் இருப்பதாகவும்” நடிகை அதுல்யா தெரிவித்திருக்கிறார்.
And #KaithiTrailer Looks Stunning..Lokesh bro u Nailed It.. Cant Wait For #Thalapathy64. And Guys don't take it us #BIGIL vs #Kaithi.. Our Movie's Craze Level & Thalapathy's Stardom Power u know...So leave that topic & Get Ready to Celebrate #BIGILTrailer ????
— × Kettavan Memes × (@kettavan_Memes) October 7, 2019
கைதி ட்ரைலர் ஸ்டன்னிங்காக இருப்பதாகவும், லோகேஷ் அசத்தியிருக்கிறார், தளபதி 64 படத்துக்காக காத்திருக்க முடியவில்லை எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
#KaithiTrailer Attagasam sema dhool ???????????????? All the very best @Karthi_Offl @Dir_Lokesh bro @prabhu_sr & the whole team???? https://t.co/I9MNKr1RKj
— Prem Kumar (@premkumaractor) October 7, 2019
அட்டகாசம் செம தூள் என நடிகர் பிரேம் தெரிவித்துள்ளார்.
https://t.co/XdHM2X5x3G#KaithiTrailer- Intense and theatre worthy. Loved the understated&‘mass’, ‘Paththu varsham ulla irundhen’nu mattum thaane theriyum, ulla porathukku munaadi yenna pannitirndhenu theriyaadhu le’. Can’t wait to watch.
All the best @Dir_Lokesh for Vijay64 too.
— Gauthamvasudevmenon (@menongautham) October 7, 2019
தீவிரத் தன்மையுடன் தெரிகிறது என்றும், 10 வருஷம் உள்ள இருந்தேன்னு மட்டும் தான தெரியும். உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியாதுல”ங்கறது இண்ட்ரெஸ்டிங்காக இருப்பதாகவும், கைதி மற்றும் தளபதி 64-க்கு வெயிட் பண்ண முடியவில்லை என்றும் இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தவிர, "கைதி" திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, ”நல்ல கதை எப்போவாவது தான் அமையும். 'மெட்ராஸ்' படத்தில ஒரு சுவர வச்சி கதை எழுதிருப்பாரு, அதுல இருக்க அரசியல் அப்போ எனக்கு புரில. அதே மாதிரி ஆழமான கதை தான் கைதி. படம் முழுக்க லாரி ஓட்டிருக்கேன். இந்தத் திரைப்படத்தால், குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரம் செலவிட முடியாமல், வீட்டில் நிறைய பிரச்சினை ஏற்பட்டது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.