scorecardresearch

முன்னணி இயக்குநரின் வெப் சிரீஸில் நடிக்கும் காஜல் அகர்வால்!

Kajal Agarwal: 10 பகுதிகளைக் கொண்ட இந்த வெப் சிரீஸை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாக, செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

முன்னணி இயக்குநரின் வெப் சிரீஸில் நடிக்கும் காஜல் அகர்வால்!
வெங்கட் பிரபு

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். தவிர, கங்கனா ரனாவத் நடித்த ’குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் காஜல்.

தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் ’கோமாளி’, தெலுங்கில் ’ரனரங்கம்’ ஆகியப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகின்றன.

இதற்கிடையே விரைவில் ஒரு வெப் சிரீஸிலும் நடிக்கவிருக்கிறாராம் காஜல்.  10 பகுதிகளைக் கொண்ட இந்த வெப் சிரீஸை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாக, செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் காஜல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காஜல் நடிக்கும் இந்த வெப் சிரீஸை முடித்தப் பிறகு, சிம்புவின் ’மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு தொடங்கவிருப்பதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kajal agarwal in venkat prabhu web series

Best of Express