மேக்கப் எல்லாம் வேஸ்ட் : இயற்கையில் நாம் இருப்பதே உண்மையான அழகு என நடிகை காஜல் அகர்வால், பொன்மொழி உதித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால், மேக்கப் இல்லாமல், சில படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த படங்களுக்கு சிலமணிநேரங்களுக்குள்ளாகவே லட்சக்கணக்கான லைக்சை அவரது ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேக்கப் இல்லாத தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், மக்கள் பெரும்பாலும் வெளித்தோற்றத்தை பார்த்துத்தான் விரும்புகிறார்கள் என்பதால் நம் உண்மையான முகத்தையே மறந்துவிடுகிறோம். அழகு சாதனபொருட்களுக்காக பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வாலின் இந்த போட்டோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாகவும், ஊடகங்களிலும் செய்தியாகவும் பரவிவருகின்றன.