நடிகை காஜல் அகர்வால் திருமணம்; காதலரை கரம்பிடித்தார்

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு திருமணம் இன்று மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

By: Updated: October 30, 2020, 10:09:41 PM

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு திருமணம் இன்று மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை காஜல் அகர்வால் இந்த மாத தொடக்கத்தில் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சம் காரணமாக, தனது திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று நடிகை காஜல் அகர்வால் அறிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் சிங்கம், மகதீரா, கவசம், துப்பாக்கி, ஜில்லா, டெம்பர், மிஸ்டர் பெர்பெக்ட், மாரி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த காஜல் அகர்வால் சமூக ஊடகங்களில் தனது திருமணம் குறித்து, “நான் திருமணம் செய்துகொள்வதை பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபர் 30, 2020 அன்று மும்பையில், எங்களுடைய நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ளூம் நிகழ்வில் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் நடைபெறுகிறது. இந்த தொற்றுநோய் நிச்சயமாக எங்கள் மகிழ்ச்சியில் ஒரு தெளிவான வெளிச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் அனைவரும் எங்கள் திருமணத்திற்கு உற்சாகமளிப்பீர்கள் என்பதை அறிவோம். பல ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழிந்த அனைத்து அன்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த நம்பமுடியாத புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் வேண்டுகிறோம். ​​ஒரு புதிய நோக்கத்துடனும் அர்த்தத்துடனும் நான் மிகவும் விரும்புவதை தொடர்ந்து செய்வேன். உங்கள் முடிவில்லாத ஆதரவுக்கு நன்றி.” என்று தெரிவித்திருந்தார்.

நடிகை காஜல் அகர்வால், தனது திருமணத்திற்கு முந்தைய நிச்சயதார்த்தம் மருதானி வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

காஜல் அகர்வாலுக்கு இன்று மாலை தனது காதலரும் தொழிலதிபருமான கௌதம் கிட்ச்லுவுடன் மும்பையில் ஒரு நட்சத்திய ஹோட்டலில் திருமணம் நடைபெறுகிறது என்பதால் அவருடைய முகத்தில் திருமணம் சந்தோஷம் ஜொளிக்கிறது. அதோடு, அவர் தனது திருமண நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலை திருமணம் செய்கிற கௌதம் கிட்ச்லு ஒரு தொழில்முனைவோர் இண்டெரியர் வடிவமைப்பு வீட்டு அலங்காரம் ஈ-காமர்ஸ் தளமான டிஸ்கர்ன் லிவிங்கின் நிறுவனர் ஆவார்.

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு திருமணம் இன்று மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. காஜல் அகர்வால் கௌதம் கிட்ச்லு மணக் கோலத்தில் உள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வாலின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை அவரும் அவருடைய நண்பர்களும் வெளியிட்டு வருகின்றனர். காஜல் அகர்வால் திருமண நிகழ்ச்சியில் அவருடைய தங்கை நிஷா அகர்வால் புகைப்படம் கவனத்தை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kajal aggarwal gautam kitchlu wedding photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X