Advertisment

பொன்னியின் செல்வனுக்கு டஃப்.. களரி வீசும் காஜல்..!

காஜல் அகர்வால், தீவிரமாக களரி கற்றுவருகிறார்.

author-image
WebDesk
New Update
Kajal Aggarwal learning to Kalari

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் களரி வீசும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

Advertisment

நடிகை காஜல் அகர்வால் கார்த்தி, தனுஷ், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக காஜல் அகர்வால், தீவிரமாக களரி கற்றுவருகிறார். இது தொடர்பான காணொலி காட்சி ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “களரிப்பயட்டு என்பது இந்திய தற்காப்பு கலையாகும். இந்தக் கலைதான் ஷாலின், குங் ஃபூ,, கராத்தே உள்ளிட்டவை உருவாக காரணமானது.

இந்தக் கலையை கடந்த 3 ஆண்டுகளாக கற்று வருகிறேன். இதற்கு மாஸ்டருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்திற்காக களரி கலையை கற்றுவருகிறார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில், காஜல் அகர்வால் இந்தியன்2 என டேக் செய்து காணொலி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment