scorecardresearch

அடுத்த டும் டும் டும்… தொழிலதிபருடன் காஜல் ரகசிய நிச்சயதார்த்தம்?

இந்த விஷயம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

அடுத்த டும் டும் டும்… தொழிலதிபருடன் காஜல் ரகசிய நிச்சயதார்த்தம்?
காஜல் அகர்வால்

இந்த கொரோனா முடக்கம், திரைப்பட துறையில் திருமண சீசன் போல தெரிகிறது. நடிகர் ராணா டகுபதி சமீபத்தில் மிஹீகா பஜாஜை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஜல் அகர்வால் திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவரும் என்றாலும், சமீபத்தில் பில்லியனர் தொழிலதிபர் கெளதமுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மாதம் இடைவெளி… இன்று முதல் சென்னையில் டாஸ்மாக் திறப்பு

நிச்சயதார்த்தத்தில் காஜல் அகர்வாலின் நல்ல நண்பரும் நடிகருமான பல்லம் கொண்டா சாய் சீனிவாஸ் கலந்து கொண்டார் என்றும், பூட்டுதல் முற்றிலுமாக முடிந்ததும் இந்த அழகான நடிகை திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. காஜலின் திருமண வதந்திகள் இது முதல் தடவையல்ல என்றாலும், அவரின் சமூக ஊடக நடவடிக்கைகளுக்கு இடையில் அசாதாரணமான நீண்ட இடைவெளி, இந்த விஷயம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்கள் இதுவரை கசிந்திருக்கவில்லை என்றாலும், ‘இந்தியன் 2’ நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது.

ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என காஜலின் தரப்பு தெரிவித்துள்ளது.

3 பொருள் போதும்… சாஃப்டான பேக்கரி கேக் வீட்லயே செய்யலாம்!

இதற்கிடையே, கடைசியாக ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தில் நடித்த காஜல், இயக்குநர் ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி. தவிர, துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவுடன் இணைந்து, கோலிவுட் நடன இயக்குனர் பிருந்தா கோபால் இயக்கத்தில் ‘ஹே சினாமிகா’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kajal aggarwal marriage secretly engaged to a billionaire