புத்தாண்டில் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன காஜல் அகர்வால்!

2020 இல் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லு இருவரும் பெற்றோர் ஆகப் போகின்றனர். வெள்ளிக்கிழமை, காஜலின் கணவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் எமோஜியுடன் ஒரு பதிவு மூலம் இதைத் தெரிவித்தார்.

Kajal Aggarwal pregnant confirms Gautam kitchlu with new year post: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் கௌதம் கிட்ச்லு தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை அக்டோபர் 30, 2020 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில், கௌதம் கிட்ச்லு தனது இன்ஸ்டாகிராமில், தனது மனைவியின் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இதோ 2022 இல் உங்களைப் பார்க்கிறேன்” என்று எழுதினார். இருப்பினும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவர் தனது தலைப்புடன் பயன்படுத்திய கர்ப்பிணி எமோஜி.

உற்சாகமடைந்த ரசிகர்கள் தம்பதியருக்கு தங்கள வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். “உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக அழகான தருணம். வாழ்த்துக்கள்,” என்று ஒருவர் எழுதியுள்ளார். மற்றொருவர், “டேக் கேர் மேம்”, மூன்றாமவர், “உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்…. குட்டி காஜல் விரைவில் வருவார்” என்று எழுதியுள்ளார்.

முன்னதாக, புத்தாண்டில் கௌதம், காஜல் இருவரும் கப்பலில் பயணம் செய்து மகிழ்ந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். “#Happynewyear2022 அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் அன்பை விரும்புகிறேன்,” என்று அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் காஜல் தனது சமூக வலைதளங்களில் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் அவரது புத்தாண்டு பதிவு அவர் கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்களை ஊகிக்க வைத்தது. புத்தாண்டு தினத்தன்று தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை காஜல் போட்டுள்ளார்.

அந்தப் படத்தில் காஜலை கௌதம் பிடித்திருந்தார். “எனவே, நான் பழைய நினைவுகளை நோக்கி என் கண்களை மூடுகிறேன். புதிய தொடக்கங்களுக்கு என் கண்களைத் திறக்கிறேன்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️ 2021 ஆம் ஆண்டிற்கு மிகவும் நன்றியுள்ளவனாக எங்கள் இதயங்களில் ஞானம், இரக்கம் மற்றும் அன்புடன் 22 இல் நுழைவதை எதிர்நோக்குகிறோம்,” என்று அவர் தலைப்பாக எழுதினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kajal aggarwal pregnant confirms gautam kitchlu with new year post

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express