Advertisment

காஜல் அகர்வால் திருமணம் அறிவிப்பு: மாப்பிள்ளை யார் தெரியுமா?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை  காஜல் அகர்வால்  தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
காஜல் அகர்வால் திருமணம் அறிவிப்பு: மாப்பிள்ளை யார் தெரியுமா?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை  காஜல் அகர்வால்  தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்ட அவர், ''வரும் 30 ஆம் தேதி, மும்பையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கவுதம் கிச்லுவுடன் திருமணம் நடக்கவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

View this post on Instagram

 

♾????????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

இந்த பெருந்தொற்றுக் காலம், எங்களின் சந்தோஷம் குறித்த  உண்மையான புரிதலை கற்றுக் கொடுத்தது. இருப்பினும், எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க இருக்கிறோம் என்று எண்ணும் போது வியப்பாக உள்ளது. எங்களை நினைத்து நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

 

 

View this post on Instagram

 

????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

இத்தனை ஆண்டுகள் என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பயணத்தைத் தொடங்கும் எங்களுக்கு, உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை.  என்னுடைய ரசிகர்களை தொடர்ந்து நான்  மகிழ்விப்பேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி'' என்று காஜல் அகர்வால் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment