சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்த நிலயில், ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதில் அளித்திருக்கிறார்.
நடிகை காஜல் பசுபதி தனது மறுமணம் குறித்து பேசியுள்ள பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி நடிகையானவர் காஜல் பசுபதி. இவர் சீரியல்களில் நடித்தார். தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகை காஜல் பசுபதி, இதைத் தொடர்ந்து, பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். 'கோ' படத்தில் நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்த காஜல் பசுபதி, 2012-ம் ஆண்டு வரை இருவரும் ஒன்றாக வாழந்தனர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
சாண்டி மாஸ்டர், அடுத்து சில்வியா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், காஜல் பசுபதி சிங்கிளாக இருந்தார்.
இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். மேலும், 'ஒரு வழியாக எனக்கு மறுமணம் முடிந்து விட்டது. திடீரென நடந்த காரணத்தால் யாருக்கும் கூற இயலவில்லை. எல்லாரும் சந்தோஷப்படுவீங்கன்னு நம்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். காஜல் பசுபதி திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, காஜல் பசுபதியிடம் நேர்காணல் ஒன்றில் அவருடைய மறுமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, “அது வெறும் பிராங் தான். இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுள்ளேன். இது ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்.” என்று அதிர்ச்சி பதில் அளித்து தெறிக்கவிட்டுள்ளார்.
மேலும், “எனக்கு மறுமணம் செய்து கொள்வதில் எல்லாம் விருப்பமில்லை. அதுக்கு வாய்ப்பும் இல்லவே இல்லை. யாரையாவது பிடிச்சு இருந்தால் கூட லீவிங் ரிலேஷன்ஷிப் மட்டும் தான். கல்யாணம் கிடையவே கிடையாது” என காஜல் பசுபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“