/tamil-ie/media/media_files/uploads/2019/12/Kajol-Ajay-Devgn.jpg)
Kajol Ajay Devgn
Kajol - Ajay Devgn's Stunning Picture : பாலிவுட் பிரபலங்கள் கஜோல் - அஜய் தேவ்கன் ஜோடி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வருகிறார்கள். இந்த ஜோடிக்கு வயது கூட கூட, கவர்ச்சியும் கூடுகிறது.
ஆமாம், சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட படம், ரசிகர்களை மட்டுமல்ல, சக சினிமா பிரபலங்களையும் பொறாமை கொள்ளச் செய்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து கஜோல் - அஜய் தேவ்கன் ஜோடி தங்களது புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இருவரும் நேர்த்தியான பார்ட்டி உடையில் போஸ் கொடுத்திருந்தனர்.
View this post on InstagramLet’s just wish everyone a very merry Xmas tonight!
A post shared by Kajol Devgan (@kajol) on
கஜோல் ஒரு பளபளப்பான நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். அதோடு குறைந்த மேக்கப்பில், மெஸ்ஸியான ஹேர் ஸ்டைலும். மறுபுறம், அஜய் தேவ்கன் கறுப்பு உடையில், தனது மனைவியைத் தழுவியவாறு இருந்தார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். இதற்கிடையே, அஜய் மற்றும் கஜோல் இருவரும் தங்களது ’தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் பிஸியாக உள்ளனர். இதில் இருவருமே கணவன்-மனைவியாக நடிக்கிறார்கள். புகழ்பெற்ற மராட்டிய போர்வீரர் தனாஜி மாலுசாரேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், சாவித்ரிபாயாக நடிக்கிறார் கஜோல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.