இந்தியில் பேசணுமா? நிருபர்களிடம் கோபப்பட்ட கஜோல்: 'இந்தி படங்களில் நடிக்காதீங்க' - நெட்டிசன்கள் காட்டம்!

காஜோல், மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழாவில் செய்தியாளர்களிடம் இந்தியில் பேச மறுத்தால் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

காஜோல், மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழாவில் செய்தியாளர்களிடம் இந்தியில் பேச மறுத்தால் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Kajol Devgan

பாலிவுட் திரையுலகில், நடிகர், நடிகைகளின் பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம், எப்போதும் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். இந்த வரிசையில், சமீபத்தில் நடிகை காஜோல் மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழாவில் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதமும், பேசிய சில வார்த்தைகளும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளன.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் விழாவில், இந்தியத் திரையுலகிற்கு அளித்த பங்களிப்புகளுக்காக காஜோலுக்கு மதிப்புமிக்க ராஜ்கபூர் விருது (Raj Kapoor Award) வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கைகளால் இந்த விருதைப் பெற்ற காஜோல், மேடையில் பேசும்போது மராத்தி மொழியில் சரளமாகப் பேசினார்.

இந்த பேச்சில், தனது தாயார் தனுஜாவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது கிடைத்ததாகவும், தற்போது தனக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விழாவிற்கு அவர் தனது தாயார் அணிந்திருந்த கருப்பு-வெள்ளை புடவையைக் கட்டியிருந்தது, இந்தத் தருணத்தை மேலும் உணர்வுபூர்வமானதாக மாற்றியது. விருது விழா முடிந்து செய்தியாளர்களுடன் பேசிய, காஜோல் விருது குறித்து மராத்தியில் பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

அப்போது  ஒரு செய்தியாளர், "அதை இந்தியில் மீண்டும் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். இதனால் கோபமான காஜோல், "இப்ப நான் இந்தில பேசணுமா? யாருக்குப் புரியணுமோ அவங்க புரிஞ்சுப்பாங்க!" என்று கோபமாக பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நெட்டிசன்கள் பலரும் காஜோலின் இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "இந்தி மொழி பேசும் ரசிகர்கள் மூலமாகப் பேரும் புகழும் அடைந்துவிட்டு, இப்போது இந்தியில் பேசச் சொன்னால் கோபப்படுகிறாரா?" என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்தியில் பேச மறுக்கும் கஜோல், அப்பறம் ஏன் இந்திப் படங்களில் நடிக்கிறீங்க?" என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பலர் இவர் இந்திப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மராத்திப் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும்" என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்தி சினிமா மூலம் புகழடைந்த ஒரு நடிகை, மொழி குறித்த விவாதத்தில் இப்படி நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், காஜோல் தன் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

"தி ட்ரையல் சீசன் 2" (The Trial Season 2) தொடரில் தனது நயோனிகா கேரக்டரில் கஜோல் மீண்டும் நடிக்கவுள்ளார். மேலும், இப்ராஹிம் அலி கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவந்த "சர்ப்ஜமீன்" என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். விமர்சனரீதியாக இப்படம் வரவேற்பைப் பெறவில்லை. "மகாராணி: குயின் ஆஃப் குயின்ஸ்" (Maharagni: Queen of Queens) என்ற புதிய படத்திலும் பிரபுதேவா மற்றும் நஸ்ருதீன் ஷா ஆகியோருடன் இணைந்து அவர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kajol

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: