காக்கா முட்டை முதல் இட்லி கடை வரை.. உணவு ஏக்கம், காதலாக மாறிய திரைப்படங்களின் பட்டியல்!

உணவை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உணவை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kakka muttai

காக்கா முட்டை முதல் இட்லி கடை வரை.. உணவு ஏக்கம், காதலாக மாறிய திரைப்படங்களின் பட்டியல்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லிகடை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இட்லி கடையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இடைவிடாத ஓட்டத்தில் நாம் கைவிட்ட முக்கியமான விஷயங்களை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான ஒரு அழைப்பாக செயல்படுகிறது.

Advertisment

‘இட்லிகடை’ போன்று உணவை மையப்பொருளாக வைத்து தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் குறித்து காண்போம். உணவு மற்றும் சினிமா பற்றி நாம் பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது ‘காக்கா முட்டை’ திரைப்படம் தான். 

இயக்குநர் மணிகண்டன் இயக்கிய இந்த படமானது சேரியில் தனது தாயுடன் வாழும் இரண்டு குழந்தைகள் குறித்த படமாகும். தன் வீட்டின் அருகில் திறக்கப்பட்ட பீட்சா கடையில் எப்படியாவது பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தில் குழந்தைகள் இருக்கின்றனர். பீட்சா வாங்குவதை லட்சியமாக கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இறுதியில் அவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதே கதை. சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் ஆசைகளின் உளவியலை இப்படம் ஆராய்கிறது. சாதி மற்றும் பொருளாதார பின்னணியில் ஏற்படும் தடைகள் மூலம் மிக அடிப்படையான ஆசைகளை கூட சமூகம் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து இந்த படம் பேசுகிறது. 

Advertisment
Advertisements

அடுத்ததாக, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் உணவு சுதந்திரத்தை பற்றி பேசியுள்ளது. ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் எப்படி தன் தடைகளை மீறி சமையல் கலைஞர் ஆகிறார் என்பதை இப்படம் பேசுகிறது. தன் தனிப்பட்ட விருப்பத்தின் மீறல் குறித்த அழுத்தமான கேள்விகளை இப்படம் எழுப்புகிறது.

உணவு சுதந்திரம் மற்றும் அதை தயாரிப்பவர்களை நடத்தும் விதம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’. மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படமானது உணவு, உறவு, ஆணாதிக்கம் மற்றும் பிற்போக்கு தனத்தை பகுப்பாய்வு செய்கிறது.

ஆண்களின் வசதியான பழக்க வழக்கங்களையும் சமையலில் அவர்கள் எப்படி பொறுப்புணர்வு அற்றும் இருக்கிறார்கள் என்பதையும் இப்படம் எடுத்துரைக்கிறது. பாலின அரசியல் குறித்த விவாதத்தை இப்படம் தூண்டுகிறது. சமையல் மூலம் ஆண்கள் மத்தியில் பெண் எப்படி நசுக்கப்படுகிறார் என்பதையும் காட்டுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘உன் சமையல் அறையில்’ . பரபரப்பான் நகரத்தில் தோழமைக்காக ஏங்கும் இரண்டு நடுத்தர வயதுடையவர்களை இணைக்க உணவு கருப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் உணவு எப்படி ஆழமான மனித தொடர்புகளை உருவாக்குகிறது என்பதை எடுத்துரைக்கிறது.

Dhanush Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: