இப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? பயில்வானுக்கு நடன இயக்குனர் செக்

சமீபத்தில் சென்னை மெரினாவில் நடிகை ஒருவர் பயில்வானிடம் சண்டைக்கு சென்ற நிகழ்வு வலைதளங்களில் வைரலாக பரவியது.

இப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? பயில்வானுக்கு நடன இயக்குனர் செக்

தமிழ் சினிமாவில், காமெடி குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடிகராகவும், தற்போது சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக நடிகைகள் குறித்தும் தமிழ் சினிமா குறித்து சர்ச்சையான கருத்தக்களை கூறி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார்.

மேலும் தனது சேனல் மட்டுமல்லாது யூடியூப்பில் பல சேனல்களுக்கு வீடியோ வெளியிட்டு வரும் இவர், சமீப காலமாக நடிகைகள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவதும், அதற்கு நடிகைகள் வலைதளங்களில் தக்க பதில் கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் சென்னை மெரினாவில் நடிகை ஒருவர் பயில்வானிடம் சண்டைக்கு சென்ற நிகழ்வு வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் தொடர்ந்து இவர் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருவதால் அவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று பிரபல    ங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், அவரிடம் பல கேள்விகளை கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். திரைப்படம் தொடர்பாக மட்டுமல்லாமல், நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சை கருத்துக்களையும் பேசி வருவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே நடிகை மீனாவின் கணவர் மரணம் தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக அப்போதே பதில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ஒருவரின் மரணத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

இதனிடையே தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர், ஒரு நடிகையே அல்லது நடிகரோ அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசுவது மிகவும் தவறு. அது அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரையும் பாதிக்கும். அவர்களை அப்படி பேசுவதால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று தெரியவில்லை. நான் அதுபோன்று பேசவும் மாட்டேன் அதுபோன்று பேசிய யூடியூப் வீடியோவையும் பார்க்கமாட்டேன். நீங்கள் போடும் வீடியோ மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ஆனால் அடுத்தவர்களின் குடும்ப கஷ்டத்தை பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்தை வைத்து என்ன செய்யபோகிறீர்கள் எப்போதுமே 4 பேரை சந்தோஷமா வாழ வைக்கனுமே தவிர 4 பேரை கஷ்டப்படுத்தி சம்பாதிப்பதை விட சம்பாத்தியமே இல்லாம இருக்கிறது பெட்டர். சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவை பற்றி தப்பாக பேசுவது ரொம்ப ரொம்ப தப்பு என்று கூறியுள்ளார்..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kala master say about bayilwan ranganathan for youtube review and controversy

Best of Express