கலகத் தலைவன், யூகி… ஓ.டி.டி தளத்தில் இந்த வார படங்கள்

பல சிறுபட்ஜெட் படங்களும் சில பெரிய பட்ஜெட் படங்களும் நேரடியாக ஒடிடி தங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பல சிறுபட்ஜெட் படங்களும் சில பெரிய பட்ஜெட் படங்களும் நேரடியாக ஒடிடி தங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கலகத் தலைவன், யூகி… ஓ.டி.டி தளத்தில் இந்த வார படங்கள்

வாரா வாரம் தியேட்டர்களில் என்ன சினிமா வெளியாகிறது என்ற எதிர்பார்க்கும் காலம் போய் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் என்ன என்பதை பெரும்பாலான ரசிகர்கள் கண்காணிக்க தொடங்கிவிட்டனர். சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒடிடி தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் பல சிறுபட்ஜெட் படங்களும் சில பெரிய பட்ஜெட் படங்களும் நேரடியாக ஒடிடி தங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களில் எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் ஒடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ள பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பட்ங்களை பார்ப்போம்.

யூகி

கதிர், நரேன், கயல் ஆனந்தி, நட்டி நடராஜ் பவித்ரா லட்சுமி முனீஷ்காந்த், ஜான்விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் யூகி. த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இதனிடையே இந்த படம் டிசம்பர் 16 (இன்று) சிம்ப்ளி சவுத் என்ற ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisment
Advertisements

அரியிப்பு

மலையாளத்தில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற படம் அரியிப்பு. முன்னணி நடிகரான குஞ்சாகோ போபன் திவ்யா பிரபா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பாலியல் ரீதியான ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று (டிசம்பர் 16) நெட்ஃபிளில்ஸில் வெளியாக உள்ளது.

கோட் நேம் திரங்கர்

பாலிவுட்டில் வெளியான இந்த படத்தில் பிரனீத் சோப்ரா, ஹார்டி சந்து ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் ரகசிய உளவாளியை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக ஹரத் கேல்கரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிரனீத் சோப்ரா தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதே திரைக்கதை. இந்த படம் டிசம்பர் 16 (இன்று) நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

ஹூ கில்டு சாண்டா

காமெடி த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இந்த படம் ஒரு சாண்டாவின் கொலையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸில் இன்று வெளியா உள்ளது.

தி பிக் ஃபோர்

இந்தோனேசியாவில் வெளியாக காமெடி த்ரில்லர் பாமான தி பிக் ஃபோர் நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகிறது.

மேலும், தமிழில் உதயநிதி நடித்துள்ள கலகத்தலைவன், அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன், விஜய்சேதுபதியின் டிஎஸ்பி உள்ளிட்ட படங்களும் இன்று (டிசம்பர் 16) ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Movie

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: