தமிழக அரசு ஆண்டுதோறும் திரைப்படங்கள், நாடகங்கள், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தினால் 1954 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 8 வருடமாக இவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது 8 வருடங்களுக்கும் சேர்த்து 201 நபர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது விபரம்
2011
பாண்டு, ஆர்.ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பின்னணிப் பாடகி பி.எஸ்.சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் 2011-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2012
டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2013
பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன், நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி, நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா, திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2014
நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015
விஜய் ஆண்டனி, யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கானா பாலா, உள்ளிட்டோர்.
2016
சசி குமார் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2017
விஜய் சேதுபதி, சிங்கமுத்து, பிரியாமணி, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்ட பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018
ஸ்ரீகாந்த், சந்தானம், ஏ.எம்.ரத்னம், ரவி வர்மன், உன்னி மேனன் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது.