/tamil-ie/media/media_files/uploads/2019/03/kalaimamani-awards-2019.jpg)
kalaimamani awards 2019, கலைமாமணி விருது
8 ஆண்டுகளில் கலைச் சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2011ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை கலைத்துறையில் கலைச் சேவையாற்றியவர்களின் பட்டியல்கள் எடுக்கப்பட்டு அதில் இருந்து 201 நபர்களுக்கு கலை மாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திரையுலகில் முன்னணியில் இருக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்த விருது கொடுக்கப்படுகிறது.
கலைமாமணி விருது 2019
நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பிரபுதேவா, சந்தானம், சிங்கமுத்து உள்ளிட்டோருக்கும், நடிகைகள் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா தேவி, பிரியாமணி உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.
பின்னணிப் பாடகர்கள் சசிரேகா, கானா உலகநாதன், கிருஷ்ணராஜ், மாலதி, கானா பாலா, உன்னி மேனன் உள்ளிட்டோருக்கும், காஸ்ட்யூம் டிசைனர் காசி, இயக்குநர்கள் ஹரி, சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனிக்கும், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவைதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு பாரதி விருதும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.