செம்மொழி நாயகனுக்கு இஷ்டமான பாடல்... செம்மொழியான தமிழ்மொழியாம்!

DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் விரும்பி ரசித்த பாடல் பற்றிய பதிவு:

Karunanidhi Health News Today: கருணாநிதி உடல்நிலை குறித்த பேச்சே எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவர் விரும்பி உருவாக்கி, ரசித்துக் கேட்ட பாடல் பற்றிய பதிவு!

கருணாநிதியின்  கைவண்ணத்தில்  ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்த  செம்மொழியான தமிழ்மொழியாம்  பாடல்   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 இன் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடல். இந்தப் பாடல் கர்நாடக, கிராமிய, ஒலியியல், சூஃபி இசை, ராக் மற்றும் ராப் உள்ளிட்ட பல்வேறு இசை பாணிகளின் ஒரு கலந்திணைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பாடகர்கள் ஒலியில் இந்த பாடல் வெளிவந்தது பலருக்கும் பிரமிப்பை தந்திருந்தது.  கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்த இந்த பாடலின்  இறுதி வடிவத்தை கேட்கும் போது கருணாநிதியே மெய் மறந்து ரசித்தாராம்.

Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES

இந்த இரவு, பகலாக   பல கலைஞர்கள் உழைப்பில் வெளியான இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் பார்த்து பார்த்து சேர்த்துள்ளார் திமுக தலைவர்  கருணாநிதி.  தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த ஒட்டு மொத்த காதலின் மொத்த வடிவமாக இந்த செம்மொழி பாடல் வெளியானது.

இதில் சுவரசியமான மற்றொரு தகவல் என்னவென்றால் இந்த பாடல் இசையமைக்கப்படும் போது கலைஞர் நேரிலே சென்று  ஸ்டோடியோவிலே  இருந்து  பல நாட்கள் பாடல் உருவாகுவதை   கவனித்துள்ளார்.  அதே போல்  இந்த பாடல் வெளியான பின்பு   அதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து  பாராட்டியும் உள்ளார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு கருணாநிதி பங்குப்பெற்ற அனைத்து  அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும்  கலை நிகழ்ச்சிகள் என அனைத்து இடத்திலும் கருணாநிதி வரும் போது முதலில் ஒலிக்கப்படும் பாடல் செம்மொழியான தமிழ்மொழியாம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close