கலகலப்பு 2 : கலர்ஃபுல் கிளாமர் எண்டெர்டெய்னர்

25க்கு மேற்பட்ட காமெடியன்கள் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக யோகி பாபு, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் என்று சொல்லாம்.

இது பார்ட் 2 சீஸன். வெற்றி பெற்ற படங்களின் டைட்டிலை பயன்படுத்தி பார்ட் 2 என்று போட்டு முந்தைய படம் வெற்றி தந்த மார்க்கெட்டை பிடிக்கும் குறுக்கு வழி முயற்சிகள் நடக்கின்றன. இந்த வார பார்ட் 2 வரவு கலகலப்பு பார்ட் 2. சுந்தர் சி படங்களில் கதையையும் லாஜிக்கையும் எதிர்பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் தான். ஆனால் ஆவற்றை மறக்க செய்யும் காமெடி தானே சுந்தர் சி யின் பலம்? அது இல்லாமல் தத்தளிக்கிறது கலகலப்பு 2.

விமல் இடத்தில் ஜீவா, சிவாவுக்கு பதில் ஜெய், சந்தானத்துக்கு பதிலாக சிவா, பழைய ஹோட்டல் – பழைய லாட்ஜ், வைரம் – மாஜி அமைச்சரின் 500 கோடி டாகுமெண்ட்ஸ், அடி வாங்கும் இளவரசு – விடிவி கணேஷ், போலீஸ் ஜான் விஜய்க்கு ராதாரவி, கும்பகோணத்துக்கு பதிலாக காசி என்று அதே கேரக்டர்களும் அதே சிச்சுவேஷன்களும் தான். ஆனால் அந்த கலகலப்பு மட்டும் குறைவு.

பாடாவதி லாட்ஜை வைத்துக்கொண்டு பாடுபடும் கேரக்டர் ஜீவாவுக்கு. மூதாதையரின் சொத்தை மீட்க வரும் ஜெய் நண்பர் ஆகிறார். இருவருக்குமே காமெடியும் ரொமான்ஸும் நன்றாக வருகிறது.

படத்தின் கவர்ச்சி கோட்டாவுக்கு நிக்கி கல்ராணியும் கேதரீன் தெரசாவும். குளுகுளு.

சுமார் 25க்கு மேற்பட்ட காமெடியன்கள் அவரவர்கள் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக யோகி பாபு, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காமெடியை விட இந்த பார்ட் 2 வில் கலர்ஃபுல் தூக்கல். ஒளிப்பதிவு இயக்குநர் யுகே செந்தில்குமார் கைவண்ணம். ஹிப் ஹாப் ஆதியும் கமர்ஷியல் படத்துக்கு தேவையானதை இசையாக்கி இருக்கிறார்.

பார்ட் 1 ஐ விட பார்ட் 2 வில் ஆட்கள் அதிகம். ஆனாலும் அந்த மேஜிக்கில் பாதி தான் தாண்டுகிறது கலகலப்பு 2.
அரண்மனை ஹிட் கொடுத்த கலெக்‌ஷனை அரண்மனை 2 தரவில்லை. இப்போது கலகலப்பு. பார்ட் 2 டைட்டிலை வைத்து கல்லா கட்ட நினைப்பவர்கள் இந்த நான்கு படங்களையும் பார்த்தாலே அதற்கான காரணங்கள் புரியும்.

ஆங்காங்கே சிரிக்க வைத்து பல இடங்களில் நெளிய வைத்தாலும் கூட சமீபகாலமாக வந்த படங்களில் ஒரு ரிலாக்சேஷனாக அமைகிறது கலகலப்பு 2.

மொத்தத்தில் கலர்ஃபுல் கிளாமர் எண்டெர்டெய்னர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close