/tamil-ie/media/media_files/uploads/2020/07/a194.jpg)
kalakka povathu yaaaru, kalakka povathu yaaaru yogi marriage, yogi marriage photos, vijay tv, hot star, கலக்கப் போவது யாரு யோகி, யோகி திருமணம்,
'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்று 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் கான்செப்ட்டை கையில் எடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து புகழ் அடைந்தவர் ராமர். அதேபோல், 'நித்தியானந்தா'-வை இமிடேட் செய்து மெகா வைரல் ஆனவர் 'கலக்கப் போவது யாரு' யோகி.
இவர், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தாலும், நித்தியானந்தா இமிடேட் காமெடி, இவருக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
இந்நிலையில், யோகி தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழியான சவுந்தர்யாவை கடந்த 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யா சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
சாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்
திருமணம் குறித்து பேட்டியளித்திருக்கும் யோகி, சவுந்தர்யாவும் தானும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் படித்த பள்ளியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தபோது தனக்கு சவுந்தர்யா மீது காதல் வயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருந்த நேரம்என்பதால், தனது காதலைச் சொல்ல தயங்கியதாகவும் கூறியுள்ளார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் தனது காதலை சவுந்தர்யாவிடம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் சவுந்தர்யாவை கரம் பிடித்திருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.